யேமன் எல்லையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் சவுதிஅரேபிய படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்தெரிவித்துள்ளது.

எத்தியோப்பியாவை சேர்ந்தவர்களே கொல்லப்பட்டுள்ளனர்.யுத்தத்தில்சிக்குண்டுள்ள எத்தியோப்பியாவிலிருந்து சவுதிஅரேபியாவிற்குள் நுழைய முயன்ற 100க்கும் மேற்பட்ட எத்தியோப்பிய குடியேற்றவாசிகளையே சவுதிஅரேபிய படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தினால் தங்கள் அவயங்கள் துண்டிக்கப்பட்டதாகவும் கொல்லப்பட்டவர்களின் உடல்களை பார்த்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான திட்டமிடப்பட்ட கொலைகள் குறித்த குற்றச்சாட்டுகளை சவுதிஅரேபியா நிராகரித்துவருகின்றது.

அவர்கள் எங்கள் மீது மழைபோல துப்பாக்கி பிரயோகம் செய்தனர் என்ற அறிக்கையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இதனை  தெரிவித்துள்ளது.

யேமன் சவுதி எல்லையில் உள்ள படையினரும் பொலிஸாரும் துப்பாக்கி பிரயோகத்திலும் வெடிகுண்டுதாக்குதலிலும் ஈடுபட்டனர் என குடியேற்றவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பிபிசிக்கு இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குடியேற்றவாசிகள் இரவில் ஆபத்தான விதத்தில் எல்லைகளை கடப்பது குறித்து விமர்சித்துள்ளனர்.

தொழில்வாய்ப்பை தேடி சவுதிஅரேபியா செல்ல முயன்ற பெண்கள் ஆண்கள் துப்பாக்கி பிரயோகத்தில் சிக்குண்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகம் பல நிமிடங்கள் தொடர்ந்தது என உயிர் தப்பிய 21 வயது நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்,கடந்த ஜூலையி;ல் எல்லையை கடக்க முயன்றவேளை 45 பேர் கொல்லப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்

நான் சுடப்பட்டது கூட எனக்கு தெரியாது நான் நடக்க முயன்றவேளை எனது காலின் ஒருபகுதி இல்லாததை உணர்ந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply