திருகோணமலை – வெருகல் மாவடிச்சேனை கிராமத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
வெருகல் – மாவடிச்சேனை கிராமத்தில் வசிக்கும் அழகுவேல் இராசகுமார் (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றையதினம் பனைமரத்தில் ஏறி பனை ஓலை வெட்டியபோது அதில் இருந்த குளவிக்கூடு கலைந்து கொட்டியதாகவும், சிகிச்சைக்காக கதிரவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிசிச்சைகளுக்காக மட்டக்களப்பு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பிலான விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.