அங்குருவத்தோட்ட, ஊருதுடுவ பிரதேசத்தில் இளம் தாய் மற்றும் அவரது 11 மாத பெண் குழந்தையை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபரின் சடலம் சிறைச்சாலையினுள் மீட்கப்பட்டுள்ளது.
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ சிப்பாயான சந்தேக நபரின் சடலம் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் அங்குருவத்தோட்ட – ஊருதுடுவ பிரதேசத்தில் வசித்த 24 வயதான வாசனா குமாரி மற்றும் 11 மாத குழந்தையான தஸ்மி திலன்யா ஆகியோரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.