பதுளை, நமுனுகுல – பூட்டாவத்தை கதிரேசன் கோவிலின் வருடாந்த தேர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட வண்டியொன்று உயர் அழுத்த மின்கம்பியில் பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை (23) பிற்பகல் ஆரம்பமான தேர் ஊர்வலம் இன்று வியாழக்கிழமை (24) அதிகாலை வரை தொடர்ந்ததாகவும், தேரை கோவிலுக்கு எடுத்துச் செல்லும்போது வண்டியின் மேல்பகுதி உயர் அழுத்த மின்கம்பியில் பட்டபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply