கொழும்பிலிருந்து காலி நோக்கிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் வாகனம் ஒன்று இன்று வியாழக்கிழமை (24) காலை காலி கலேகன பகுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனால் கொள்கலனிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.

இந்த கொள்கலன் வாகனம் காலி நகரில் உள்ள பல வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை கொண்டு சென்று கொண்டிருந்தபோதே தீப் பற்றி எரிந்துள்ளது.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply