தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அருட்தந்தையரின் கழுத்தில் கத்தி வைத்து பெருமளவான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டு பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றினுள் வியாழக்கிழமை அத்துமீறி நுழைந்த நால்வர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று அருட்தந்தையரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டது.

அருட்தந்தையரின் 30 ஆயிரம் ரூபாய் பணமும், தேவாலய உண்டியலில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply