மாஸ்கோ: வாக்னர் குழுவின் தலைவர் விமான விபத்தில் பலியான நிலையில் அது தொடர்பாக பிரிக்ஸ் மாநாட்டில் இருந்த ரஷ்ய அதிபர் புடின் கொடுத்த ரியாக்சன் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
நேற்று முதல்நாள் ரஷ்யாவில் நடந்த விமான விபத்தில் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் கொல்லப்பட்டார்.
இவர் புடினுக்கு ஒரு காலத்தில் மிக நெருக்கமாக இருந்தார். புடினின் பர்சனல் உணவு தயாரிப்பாளராகவும் இவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் திடீரென வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் தலைமை உக்ரைனில் இருந்த வாக்னர் படையினர் மாஸ்கோவை நோக்கி வந்தனர்.
புரட்சி: ரஷ்ய ராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, வாக்னர் குழுவை ராணுவத்துடன் இணைக்க வேண்டும் என்று ரஷ்யா பாதுகாப்புத்துறை முயற்சி செய்தது போன்ற காரணங்களாலும், வாக்னர் குழுவினர் சிலரை ரஷ்ய ராணுவம் தாக்கியதால் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் தலைமை உக்ரைனில் இருந்த வாக்னர் படையினர் மாஸ்கோவை நோக்கி வந்தனர்.
இதனால் உள்நாட்டு போர் ஏற்படும், புடின் ஆட்சி கவிழ்க்கப்படும், பெரிய மோதல் உண்டாகும் என்றெல்லாம் கருதப்பட்டது.
ஆனால் கடைசியில் பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ நடத்திய பேசசுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படவே வாக்னர் குழு வந்த வழியே திரும்பி சென்றது.
மரணம்: அதோடு வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் பெலாரசுக்கு செல்வதாக முடிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் சிஐஏ தலையீடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி சிஐஏதான் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜினிக்கு பல பில்லியன் டாலர்களை கொடுத்து புடின் அரசை கவிழ்க்க சதி செய்ததாக கூறப்படுகிறது.
புடின் ஆட்சியை முடிக்க வேண்டும், ரஷ்யாவில் பொம்மை ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று சிஐஏ முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் ரஷ்யாவில் நடந்த விமான விபத்தில் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் பலியானார்.
அவரின் மரணத்திற்கு பின் ரஷ்ய அரசின் சூழ்ச்சி இருக்கலாம் என்று வாக்னர் குழு குற்றச்சாட்டு வைக்கிறது.
இந்த அமைப்பை உருவாக்கிய உட்கின் என்பவரும் இந்த சம்பவத்தில் பலியாகிவிட்டார். இந்த மரணம் வாக்னர் குழுவின் முடிவுரையாக பார்க்கப்படுகிறது.
புடின் ரியாக்சன்: வாக்னர் குழுவின் தலைவர் விமான விபத்தில் பலியான நிலையில் அது தொடர்பாக பிரிக்ஸ் மாநாட்டில் இருந்த ரஷ்ய அதிபர் புடின் கொடுத்த ரியாக்சன் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்த மரணம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. பிரிகோஜின் விமான விபத்தில் பலியான சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது.
இந்த விபத்து தொடர்பாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முக்கியமான புகார்களை வைத்து வருகின்றனர்.
இதை புடின்தான் செய்திருப்பார். வாக்னர் மேற்கொண்ட புரட்சியை புடின் விரும்பவில்லை. தன்னை வாக்னர் எதிர்த்ததாக அவர் நினைத்துவிட்டார்..
புடினை எதிர்த்தால் குலநாசம்தான். அதனால்தான் புடின் கொன்றுவிட்டார் என்று அமெரிக்க ராணுவ, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பலர் சர்வதேச ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர்.
புடின் இந்த கொலையை திட்டமிட்டு இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், பிரிகோஜின் மிகவும் திறமையானவர். வலிமையான நபர். அவர் ஆக்கபூர்வமான மனிதர். அவர் சில தவறுகளை செய்து இருக்கிறார்.
இருந்தாலும் அவர் சிறப்பான பிஸ்னஸ் மேன். அவரை எனக்கு நீண்ட காலமாக தெரியும். அவரின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். அவர் சில தவறுகளை செய்து இருந்தாலும் சரியான முடிவுகளையே அவர் எடுத்து இருக்கிறார், என்று புடின் கூறி உள்ளார்.