மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயின் சடலம் நுரைச்சோலை ஷெடபொல களப்பில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஷெட்டபொல மன்பூரிய பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய செபஸ்டியன் உர்சுலா என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணின் தலையில் இரண்டு கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண்ணைக் கொன்ற பின்னர், அவளிடம் இருந்து கிட்டத்தட்ட 20,000 ரூபாய், உடைகள் மற்றும் தங்க நெக்லஸ், ஒரு தங்க மோதிரம், மருந்து, அலைபேசி ஆகியவற்றை ஒரு பையில் வைத்து சதுப்புநிலக் காட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். .

Share.
Leave A Reply