மாத்தறை மாவட்ட நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் T-56 ரக துப்பாக்கியால் மார்பில் சுடப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கெனதுறை தல்பாவில மெத பொல தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பந்துல புஷ்பகுமார என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவரது மார்பில் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சந்தேகத்துக்கிடமான துப்பாக்கி காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply