நேற்றிரவு பங்கம தெதியகல பிரதேசத்தில் 25 வயதுடைய தனது மைத்துனியை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளானவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்ப தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இன்று அதிகாலை அக்குரஸ்ஸ லெனம பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்திய துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply