தன்னுடைய சகோதரியின் மகளான 16 வயதான மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி, அவளை கர்ப்பமாக்கினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், 24 வயதான மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், திம்புள்ளை-பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டகலை பிரதேசத்தில் ​இடம்பெற்றுள்ளது.

விருந்தினராக வந்திருந்த மாமா, அந்த யுவதியின் பெற்றோர் இருவரும் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள விலங்கு பண்ணைக்கு வேலைக்குச் சென்றிருந்த போதே, இன்றைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் வீட்டிலேயே வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

தன்னுடைய மகளுக்கு தொடர்ச்சியாக வயிற்றுவலி ஏற்பட்டது தொடர்பில், வைத்தியரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தியபோதே, மகள் கர்ப்பமாக இருக்கின்ற விடயம் தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த பெண்ணின் தாய், திம்புள்ளை-பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்பின்னர், நாவலப்பிட்டியவை வசிப்பிடமாகக் கொண்ட மாமா கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றனர்.

Share.
Leave A Reply