அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர் ஜெஃப்ரி லாங், நோயாளிகளின் சுமார் 5000 மரண அனுபவங்களை ஆய்வு செய்துள்ளார். அவர் மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார் .

ஜெஃப்ரி லாங் ஒரு புற்றுநோயியல் நிபுணரும், நியர்-டெத் எக்ஸ்பீரியன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் நிறுவனரும் ஆவார். ஜெஃப்ரி லாங் தனது பணியின் போது நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்ட ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

ஜெஃப்ரி லாங் கூறுகையில், மரணத்திற்குபின் ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து அலைந்து திரிந்தது , பின்னர் ஆன்மா வேறொரு உலகத்தில் நுழைந்து ஒரு சுரங்கப்பாதை வழியாக நடந்து சென்றது, அதன் முடிவில் சுரங்கப்பாதையில் ஒரு பிரகாசமான ஒளி இருந்தது. நோயாளிகள் இறந்த தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றதாகவும், அந்த நேரத்தில் அங்கே அவர்களின் உண்மையான வீடு இருப்பதாக அவர்கள் உணர்ந்ததாகவும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share.
Leave A Reply