வாதுவ, ரத்நாயக்க வீதிக்கு அருகில் புகையிரத கடவையின் ஊடாக பயணித்த வேன் ஒன்று புகையிரதத்தில் மோதியதில் வானில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையில் புதன்கிழமை (30) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்திற்கு உள்ளான இளம் தம்பதிகள் விடுமுறையை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள உல்லாச விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் வான் மோதி விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில் சிக்கிய பெண்ணை பிரதேசவாசிகள் காப்பாற்ற முயற்சித்ததாகவும் வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் சிக்குண்டவர்கள் கொட்டிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாதுவ பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் சாமேந்திர, பொலிஸ் பரிசோதகர் கயான் கஹடபிட்டிய, சார்ஜன்ட் உபுல், போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய பொலிஸார் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.