சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா தமது உத்தியோகபூர்வ முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொழும்பில் உள்ள மத்தேகொடவில் ஆரம்பித்துள்ளது.
சந்தையில் தற்போது பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலையை காட்டிலும் சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக 3 ரூபா குறைவாக லீற்றர் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சினோபெக் நிறுவனம் தயாராகி வருகின்றது.