தொடர்ச்சியாக 24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்தை சார்ந்த 7 இளைஞர்களும், இரு யுவதிகளும் இடம்பிடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 30 ஆம் திகதி காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி காலை 8 மணிவரை குறித்த இளைஞர்கள் தொடர்ச்சியாக நடனமாடியுள்ளனர். ஹட்டன், டன்பார் மைதானத்தில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது.
இவர்கள் லிந்துலை,மெரேயா,அக்கரபத்தனை, டயகம ஹப்புத்தளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். மேலும் இவர்கள் ஹட்டன் பகுதியில் உள்ள நடன பயிற்சி நிலையமொன்றில் பயிற்சி பெற்றவர்கள் . இந்நிகழ்வுக்கு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியின் அனுசரணை வழங்கியிருந்தது

நடனக் கலைஞர்கள் கட்டங்கட்டமாக ஓய்வெடுக்கவும், உணவு உண்ணவும் மட்டுமே சிறிது நேரம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது . இந்த சாதனை நடனத்தை கண்டுகளிக்க பெருமளவானோர் வருகை தந்திருந்தனர்.

Share.
Leave A Reply