இரத்தினக்கற்களை சட்டவிரோதமாக சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் வெளியேறும் முனையத்தில் வைத்து 2 கிலோகிராம் 311 கிராம் நிறையுடைய சுமார் 29 கோடி 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான இரத்தினக்கற்களுடன் இன்று குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர், ஒருகொடவத்த பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் என்பதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.