சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 5000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடம் இதுவரை 5456 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இதில் 242 முறைப்பாடுகள் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பானவை எனவும் குறிப்பிட்டுள்ளது.

1296 முறைப்பாடுகள் சிறுவர்கள் இரக்கமற்ற முறையில் நடத்தப்பட்டமை தொடர்பானவை என தெரிவித்துள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை 163 பாரதூரமான காயங்கள் தொடர்பானவை எனவும் தெரிவித்துள்ளது.

சிறுவர்களை யாசகம் பெறுவதற்காக பயன்படுத்துவது தொடர்பில்196 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இணையபாதுகாப்பு தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன சமூகஊடகங்கள் இணையவெளியில் சிறுவர்துஸ்பிரயோகம் தொடர்பில் 110 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.

Share.
Leave A Reply