1,450 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சியை இன்று முதல் 1,250 ரூபாவிற்கு பல்பொருள் அங்காடிகளில் கொள்வனவு செய்ய முடியும் என அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து நேற்று விவசாய அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் தலைவர் அஜித் வீரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் பண்டிகை காலம் தொடங்கும் போது, உள்ளூர் முட்டையை 30 ரூபாவுக்கு நுகர்வோர்கள் பெறலாம் என கலந்துரையாடலின் பின்னர் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, புதிய எரிவாயு விலை திருத்தம் நாளை அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.