சர்­வ­தேச உறவு குறித்த அறிவை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்­டு­மாயின் தாம் ஒரு அர­சற்ற தரப்பு என்ற நிலையை முதலில் புரிந்து கொள்­வதன் மூலமே அது தெளி­வாக அணு­கப்­ப­டு­வ­தற்கு உத­வி­யாக இருக்கும். இந்து சமுத்­திர பிராந்­தித்தில் இன்று இடம் பெறும் மாற்­றங்கள், அந்த மாற்­றங்­களில் இருந்து பெற்று கொள்ளக் கூடிய நலன்கள், சவால்கள் ஆகி­ய­வற்றை தெரிந்து கொள்­வ­தற்கு அர­சற்ற தரப்பு என்­பதை அடிப்­ப­டையில் தெரிந்து செயற்­ப­டு­வது முக்­கி­ய­மா­ன­தாகப்படு­கி­றது.

இதுவே தமிழ் மக்­க­ளுக்­கான அங்­கீ­கா­ரத்தை பெற்று கொள்­வ­துடன் பாது­காப்பை உறுதி செய்து கொள்­வ­தற்கும் பேரு­த­வி­யாக இருக்கும்.

அர­சற்ற பாத்­திரம் என்ற நிலையில் நின்று வல்­ல­ர­சு­களின் நகர்­வு­களை நோக்கும் போது தான், சர்­வ­தேச செயற்­பா­டு­களை புரிந்து கொள்­ளவும் முடியும் அதே­வேளை, சர்­வ­தேச செயற்­பா­டு­க­ளிலும் சுதந்­தி­ர­மாக இறங்க முடியும். இல்­லையேல், இலங்கை அரசின் பின்னால் நின்று கொள்ள வேண்­டிய நிலையே ஏற்­படும். இந்த நிலையில் தமிழ் மக்கள் தமது முக்­கி­யத்­துவம் உண­ரப்­ப­டாத நிலைக்கு தள்­ளப்­பட்டு விடுவர். ஆக, மன­த­ளவில் தமிழ் மக்கள் சர்­வ­தேச அர­சி­யலில் ஓர் அங்கம் என்ற உண்மை நிலையை காண அர­சற்ற நிலையை புரிந்து கொள்­வது நல்­லது.

இந்து சமுத்­தி­ரத்தின் முக்­கி­யத்­துவம் கடற்­பாதை மற்றும் பாது­காப்பு மூலோ­பாய நகர்­வுகளில் வர­லாற்று ரீதி­யாக மிக முக்­கி­ய­மான பங்­காற்றி வரு­கி­றது. இந்த வர­லாற்று நகர்­வுகள் ஒவ்­வொன்­றிலும் தமிழ் மக்கள் என்றும் ஒரு பாத்­தி­ர­மாக இருந்­தி­ருக்­கின்­றனர். ஆனால் தமிழ் மக்கள் அவர்­க­ளது முக்­கி­யத்­து­வத்தை உண­ராது இருந்­தி­ருக்­கின்றனர் அல்­லது அவர்­க­ளது இருப்பு மறைக்­கப்­பட்டு தமிழ் மக்­க­ளுக்கு பதி­லாக இலங்­கை­அ­ரச தரப்பு அதனை கையாண்டு இருக்­கி­றது. அல்­லது இது உண­ரப்­ப­டாத வகையில் தமிழ் மக்கள் காலா­ காலமாக திசை திருப்­பப்­பட்ட நிலை இருந்­துள்­ளது .

ஆனால் அர­சற்­ற­ பாத்­தி­ர­மாக, தனித்­த­ரப்­பாக தனது விட­யங்­களை என்று தமிழ் மக்கள் கையாள விளை­கின்­ற­னரோ அன்றே சர்­வ­தேச அர­சி­யலின் முக்­கி­யத்­து­வத்தை அறிந்­த­வர்­க­ளாக இருப்பர். சர்­வ­தேச அரங்கில் தமக்­குள்ள பொறுப்­பு­க­ளையும் அங்­கீ­கா­ரங்­க­ளையும் புரிந்து கொள்ளும் நிலைக்கு உள்­ளா­குவர். சர்­வ­தேச அர­சி­யலில் அர­சற்ற பாத்­தி­ரங்­க­ளுக்கு முக்கியத்துவம் கொடுக்­கப்­படும் வரை முறை­க­ளையும் கட்­டுப்பா­டு­க­ளையும் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு ஏற்ப கையாள்­வது அங்­கீ­கா­ரத்தை நோக்­கிய பய­ணத்­திற்கு அடிப்­ப­டை­யா­னது.

இதன் அடிப்­ப­டையில் மிக அண்­மையில் இந்து சமுத்­திரம் நோக்­கிய பிரான்ஸ் நாட்டின் நகர்வு கவ­னிக்கத்தக்­க­தாகும். உல­கி­லேயே இந்­தி­யாவும் பிரான்ஸும் தான் தாம் நினைத்த வகையில் வெளி­யு­றவுக் கொள்­கை­களை கொண்­டி­ருக்கும் தன்மை வாய்ந்­தவை என்­பது பொது­வான பார்­வை­யாகும். எந்த வல்­ல­ர­சு­க­ளு­டனும் கூட்டு வைத்­தி­ருந்­தாலும் சுய­மாக தமது தீர்­மா­னங்­களை எடுக்கும் வல்­லமை இந்­தி­யா­வி­டமும் பிரான்­ஸி­டமும் தான் உள்­ளது. அதா­வது உச்ச வல்­ல­ர­சு­களின் அழுத்­தங்­க­ளுக்கு அப்பால் செயற்­படும் வல்­லமை கொண்­ட­ன­வாக உள்­ளன. இந்­தி­யாவின் இத்­த­கைய சுதந்­தி­ர­மாக செயற்­படக் கூடிய நிலையை தமிழ் மக்கள் மிக அடிப்­ப­டையில் புரிந்து கொண்­டி­ருப்­பது முக்­கி­ய­மா­ன­தாகும்.

பிரான்­ஸுக்கும் இந்­தி­யா­வுக்­கு­மான உறவு சீனாவின் அதீத வளர்ச்­சியின் கார­ண­மாக உந்­தப்­பட்ட ஒன்றே ஆகும். சீனா இந்து சமுத்­திர பிராந்­தி­யத்தில் அண்மைக் காலத்தில் மிக அதி­க­ரித்த செல்­வாக்கை உரு­வாக்கி உள்­ளது. இதில் இலங்கை அரசின் நகர்­வுகள் மிக முக்­கி­ய­மான ஒரு விவ­கா­ர­மாக உலக அளவில் கரு­தப்­ப­டு­கி­றது. பாரிய அளவில் சீனா­விடம் கடன் பட்ட நிலையும் இறு­தி­யாக சீனாவை நிரந்­த­ர­மாக அல்­லது மிக நீண்ட காலத்­திற்கு இலங்­கையில் அனு­ம­தித்த நிலையும் இந்து சமுத்­திரப் பிராந்­தி­யத்தில் பாரிய சம­நிலை நோக்­கிய ஒரு நகர்­வுக்கு உச்ச வல்­ல­ர­சு­க­ளையும் இடை நிலை வல்­ல­ர­சு­க­ளையும் தள்ளி உள்­ளது .

சீனா­விடம் கடன் பட்ட நிலை­யா­னது இலங்­கையின் இறை­யாண்மை இழப்பு என்று பல சர்­வ­தேச ஆய்­வுகள் கூறி உள்­ள­ போ­திலும் இலங்கை அதனை சர்­வ­தேச அரங்கில் தனது முக்­கி­யத்­து­வத்தை வெளிப்­ப­டுத்தும் ஒரு பேரம் பேசும் விவ­கா­ர­மா­கவே இன்­று­வரை கருதி வரு­கி­றது.

இந்து சமுத்­திர பிராந்­தி­யத்தில் பிரான்ஸ் தனது செல்­வாக்கை அதி­க­ரித்து கொள்­வ­தற்கு சீனா­வுக்கு எதி­ரான இந்­தி­யாவின் வளர்ச்­சியை தனக்கு சாத­க­மாக்கி கொள்ளும் நோக்கம் கொண்­டது என்­பது ஒரு புறம் இருந்­தாலும், இந்­தி­யா­ மீது பிரான்ஸ் கொள்கை வகுப்­பாளர் தரப்­பிற்கு அதிக நம்­பிக்கை இல்லை என்­பது தான் உண்மை.

மத­வாதம், எதேச்­சா­தி­கார ஆட்சி, பத்­தி­ரிகை சுதந்­திரம் மற்றும் சமூக அமைப்­புகள் ஆகி­ய­வற்றின் மீதான தாக்­கு­தல்கள், நீதித்­தறை மீது திட்­ட­மிட்ட முத­லா­ளித்­தவ நெருக்­கு­தல்கள் போன்ற விவ­கா­ரங்கள் இந்­தி­யாவின் எதிர்­கா­லத்தை பெரும் பாதிப்­பிற்­குள்­ளாக்­கு­கின்­றது என்­பது பிரான்­ஸிய சிந்­தனை ஆகும்.

இருந்த போதிலும் இந்­தி­யா­வுடன் இரு­த­ரப்பு ஏற்­பா­டு­களை செய்து கொள்­வதில் பிரான்ஸ் ஆர்வம் காட்டி வரு­கின்­றது. தன்னை ஓர் இந்தோ– பசுபிக் நாடு­களின் அங்­க­மாக நிலை நாட்டி கொள்­வதன் மூலோ­பாய தேவை­களின் அடிப்­ப­டையில் பிரான்ஸின் நகர்­வுகள் உள்­ளன.

இந்து சமுத்­திர பிராந்­தி­யத்தின் ஊடாக இடம்­பெறக் கூடிய போக்­கு­வ­ரத்தும் அதன் பாது­காப்பும் ஐரோப்­பிய நாடுகள் பலவற்றின் நகர்­வு­க­ளுக்கு கார­ண­மாக இருந்து வரு­கி­றது. இந்­தி­யா­விடம் பல குறை பாடு­களை மேலை நாடுகள் கண்டு வரு­கின்ற போதிலும் இந்­தி­யாவை வளர்த்து விடு­வதில் அவை கவனம் செலுத்­து­கின்­றன. சீனா­வுடன் இந்­தியா ஒப்­பீட்­ட­ளவில் மிகவும் வலிமை குறைந்த நிலை­யி­லேயே இன்­னமும் இருப்ப­தா­கவே மேலை நாடுகள் கருது­கின்­றன.

இந்த நிலையை சாத­க­மாகக் கொண்டு தமது நகர்­வு­களை மேலை நாடுகள் செய்து வரு­வதை காணக் கூடி­ய­தாக உள்­ளது.

பிரான்ஸ் ஜனா­தி­பதி இலங்கை வந்­தி­ருந்த போது தமிழ் மக்கள் எந்த விதத்­திலும் தம்மை வெளிக் கொணர முடி­யாது போனது மிகவும் பின் தங்­கிய அர­சியல் பார்­வை­யா­கவே தெரி­கி­றது. தமிழ் மக்­களின் இருப்பு இல்­லாது போகி­றது என்­ப­தையே இது எடுத்துக் காட்­டு­கி­றது.

இது வரை காலமும் தமிழ் மக்­களின் வெளி­வி­வ­கார நகர்­வுகள் இலங்கை அர­சினால் கையா­ளப்­பட்டு திசை திருப்­பப்­பட்ட நிலையே இருந்து வந்­தது எனலாம். இந்த விவ­கா­ரத்தில் தமிழ் மக்கள் தழைத்து விடாத வகையில் 2009 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­க­ளுக்கு முன்பு கவனத் திசை திருப்­பல்­களை உரு­வாக்கி தொடர்ச்­சி­யான இராணுவ சிந்தனைக்குள்ளேயே தமிழ் மக்களை வைத்திருந்தது. அந்த காலப்பகுதிகளில் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியான தாக்குதல் நடவடிக்கைகளை முடுக்கி விடுவதன் மூலம் தமிழ் மக்கள் ஒரு அரசற்ற தரப்பு என்பதை உலகம் உணராத வகையில் வைத்திருந்தது.

2009 ஆண்டிற்கு பின்பு தமிழ் மக்கள் மீது அரச இயந்திர அலகுகள் மூலமும் நிர்வாக கட்டுக்கு அப்பாற்பட்ட அலகுகள் மூலமும் பல்வேறு சமூக மற்றும் மத ரீதியான அழுத்தங்களை கொண்டு நகர்த்தி வருகிறது. இந்த நிலையை உடைத்து வெளியேவர வேண்டுமாயின் சர்வதேச அரங்கில் நிறுவன ரீதியாக தமிழ் மக்கள் சட்ட ரீதியான அங்கீகாரம் பெற்ற ஒரு அரசற்ற பாத்திரம் என்ற நிலையை எட்டுவதன் மூலமே அ சாத்தியமாகும் .

(லோகன் பர­ம­சாமி) Virakesari

Share.
Leave A Reply