13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்தல், மற்றும் அதிகாரப்பகிர்வு விடயங்கள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் காலதமாதமாகும் என்று அரச உயர்மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, செப்டெம்பர் மாத ஐ.நா.கூட்டத்தொடர் மற்றும், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கொடுப்பனவுக்கான மீளாய்வு உள்ளிட்ட விடயங்கள் நிறைவுற்றதன் பின்னரேயே இவ்விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலையில் 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான குழுவினர் குறித்த விடயங்கள் பற்றிய கலந்துரையாடல்களைச் செய்யவுள்ளனர். குறித்த காலந்துரையாடல் இம்மாதம் முதல்வாரத்திலிருந்து ஆரம்பமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

( ஆர்.ராம் )

Share.
Leave A Reply