2022ஆம் ஆண்டு வாகன சாரதிகள் செய்த குற்றங்களுக்காக அறவிடப்பட்ட தண்டப்பணத்தின் பெறுமதி 2.5 பில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதில் 1.3 பில்லியன் பொலிஸ் உத்தியோகத்தர்களால் அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் பெறப்பட்டுள்ளதுடன் மேலும் 1.2 பில்லியன் ரூபாய்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சாரதிகளுக்கு உத்தரவிடப்பட்ட அபராதம் மூலம் பெறப்பட்டுள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவது அதிக அபராதம் விதிக்கும் குற்றமாகும். அதன் மூலம் கிடைத்த வருமானம் 622 மில்லியன் ரூபாய்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Share.
Leave A Reply