ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தமது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டிருந்த இளைஞர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் எப்பாவல, மெடியாவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தம்புத்தேகம மற்றும் எப்பாவல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.