பிடிகல தல்கஸ்பே பிரதேச வீடொன்றின் பின்புறமுள்ள வாழைத் தோட்டத்திலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் பொத்துவில்ஹேனை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலம் இன்று (4) காலை மீட்கப்பட்டதாக பிடிகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த வீட்டிலிருந்து நள்ளிரவு இவரின் அலறல் சத்தம் கேட்ட அயலவர்கள் பொலிஸாருக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று இன்று (4) காலை இவரை சடலமாக மீட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.