நேற்று (செப். 03) வரை 200,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட 200,026 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறியுள்ளதாக SLBFE தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அதிகளவான புறப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது, மொத்தம் 311,000 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த ஆண்டும் 300,000 பேர் வெளிநாட்டு வேலைக்காக செல்வார்கள் என SLBFE மதிப்பிடுகிறது.

Share.
Leave A Reply