யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி முன்பாக உள்ள தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளது.

சண்டிலிப்பாய் பகுதியில் இருந்து சில்லாலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 20 வயதுடைய சில்லாலை வடக்கைச் சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளார்.

Share.
Leave A Reply