நிகவெரட்டிய நகர் பகுதியை அண்மித்த நெல் வயல் ஒன்றின் நடுவில் இருந்து நிர்வாணமாக காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் ஒன்று புதன்கிழமை (05) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிகவெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 40 – 45 மதிக்கத்தக்க வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு நிர்வாணமாக காணப்பட்டதுடன், அந்த சடலம் யாருடையது என்பது பற்றி இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த சடலம் வெளிப் பிரதேசத்தில் இருந்து கொலை செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டு குறித்த நெல் வயலுக்குள் போடப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் நிகவெரட்டிய பொலிஸாரும் , பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குறித்த சடலம் பழுதடைந்து காணப்படுவதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிகவெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply