முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டெம்பர் செவ்வாய்கிழமை (05) நேற்று மேற்கொள்ளப்படும் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கடந்த ஆகஸ்ட் (31)அன்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் கடந்தவாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் செப்டெம்பர் (05)நேற்று குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கமுடியவில்லை.
அதனடிப்படையில் குறித்த மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டெம்பர் (06)இன்று, காலை 8.00மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த மனிதபுதைகுழி அமைந்தபகுதி குற்றப் பிரதேசமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த புதைகுழிப்பகுதிக்கு பாதுகாப்பு கூரைகள் அமைக்கப்பட்டு இந்த அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி, தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ, தொல்லியல் துறைசார்ந்தோர், சட்டத்தரணிகளான கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தாஞானராசா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,தடையவியல் போலிசார், சமூக ஆர்வலர் அ.பீற்றர்இளஞ்செழியன், கிரமாஅபிவிருத்திச்சங்கத் தலைவர் கி.சிவகுரு பொலிஸ்விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டவர்களின் முன்னிலையில் இந்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.