செப்டெம்பர் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் கிட்டத்தட்ட 23,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் (SLTDA) வெளியிடப்பட்ட தரவுகளின்படி, செப்டெம்பர் மாதத்தில் இதுவரை 22,896 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
செப்டெம்பர் மாதத்திலும் 6,188 இந்திய பிரஜைகள் வருகை தந்துள்ள நிலையில் இந்தியாவில் இருந்து வரும் பார்வையாளர்கள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இதேவேளை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 1,693 நபர்களும், ஜேர்மனியிலிருந்து 1,513 பேரும், ரஷ்யாவிலிருந்து 1,434 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 1,127 பேரும், சீனாவில் இருந்து 1,114 சுற்றுலாப் பயணிகளும் இந்த மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக SLTDA மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மொத்தம் 136,405 சுற்றுலாப் பயணிகள் வந்ததாக SLTDA தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 927,214 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.