பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பலருக்கு பாதுகாப்பு அமைச்சினால் 35 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை அவசியம் என கோருபவர்களும், அதற்கு பொறுப்புகூற வேண்டியவர்களும் தற்போதைய அரசாங்கத்திலேயே அங்கம் வகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செனல் 4 வெளிப்படுத்தலுக்கமைய, பிள்ளையானும், ஏப்ரல் 21 தாக்குதல் சூத்திரதாரிகளும் ஒரே சந்தர்ப்பத்தில் ஒரே சிறைச்சாலையில் இருந்துள்ளனர்.
பிள்ளையான் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் மூலம் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து இன்னும் விசாரிக்கப்பட வேண்டிய பகுதிகள் உண்டு என்பது புலப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சினால் பிள்ளையான் உள்ளிட்ட பலருக்கு நீண்டகாலமாக 35 இலட்சம் ரூபா வழங்கப்பட்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தொகை எதற்காக வழங்கப்பட்டது என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டும் எனவே, இந்த தாக்குதல்கள் குறித்து சுயாதீனமாக விசாரணையொன்று அவசியமாகின்றது.
அத்துடன், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் இத்தகைய சதிகளை மேற்கொண்டு, இனவாதத்தை தூண்டிவிடுபவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட வேண்டுமென பாரா ளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.