இலங்கை – இந்திய அணிகள் மோதும் மிக முக்கியமான ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (11) நடைபெறுகிறது.
இன்றைய போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடுவதைத் தெரிவுசெய்தது.
இது இவ்வாறிருக்க, இலங்கை அணி தொடர்ச்சியாக 13 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதால் இந்தியாவுக்கு எதிரான போட்டியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது.
இன்றைய போட்டிக்கு இலங்கை அணியில் மாற்றம் எதுவும் இடம்பெறாததுடன் இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்குப் பதிலாக அக்சார் பட்டேல் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
அணிகள்
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக்க (தலைவர்), துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, கசன் ராஜித்த, மதீஷ பத்திரண.
இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, கே. எல். ராகுல், இஷான் கிஷான், ஹார்திக் பாண்டியா, ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல், ஜஸ்ப்ரிட் பும்ரா, குல்தீப் யாதவ், மொஹமத் சிராஜ்.