லிபியாவை தாக்கிய ​டேனியல்  சூறாவளிப்    புயல்    காரணமாக 2000 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமற் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு லிபியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்ற நிலையில்  டேனியல் சூறாவளிப் புயலும் தாக்கியுள்ளது.

இதனால் டெர்னா, சூசா, பாய்தா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட நகரங்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்  பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

இந்தநிலையில்  2000 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமற்போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.   இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

வெள்ளம் பாதித்த  டெர்னா நகரை பேரழிவு மண்டலமாக  அறிவித்துள்ள அந்நாட்டுப் பிரதமர் ஒசாமா ஹமாட்    நாடு முழுவதும் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறும்  உத்தரவிட்டுள்ளார்.

தெற்கு ஆப்பிரிக்காவின் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Share.
Leave A Reply