யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாவின் தீர்த்தோற்சவம் இன்று நடைபெறுகிறது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவில் நேற்று(13) காலை இரதோற்சவம் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து தீர்த்தோற்சவத் திருவிழா இடம்பெறவுள்ளதுடன், இன்று(14) மாலை கொடியிறக்கம் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
இன்று காலை வசந்தமண்டப பூஜை, ஸ்தம்ப பூஜை என்பன இடம்பெற்ற பின்னர், ஆலயத்தின் ஷண்முக தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவம் இடம்பெற்று வருகின்றது.