கிளிநொச்சியில்  காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (15) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (14) காலை 6 மணியளவில் மாலையாளபுரம் புதுஜயன்கன்குளம் பகுதியில்  கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டு வரும் நபர்களை கைது செய்வதற்காக மூன்று பொலிஸார் சென்றுள்ளனர்.

 

இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டவர்கள் பொலிஸாரை கண்டு குளத்திற்குள்ளாக தப்பி ஓடிய போது அவர்களை பொலிஸார்  தனித்தனியாக ஒவ்வொரு வழியாக திரத்திச் சென்றுள்ளனர்.

இறுதியில் இரு பொலிஸார் திரும்பிய நிலையில் ஒருவர் காணாமல் போயிருந்தார். அவரை நேற்று இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து தேடிய போதும் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

இந்நிலையில், இன்று குளத்திற்குள் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடுதலை மேற்கொண்டதில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் குளத்திற்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் பன்சலகொட வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த  லியனகே சத்துரங்க என்வரே இறந்துள்ளார். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share.
Leave A Reply