அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் குடிநிலம் பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (17) சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பாக தெரியவருதாவது,

திருக்கோவிலில் இருந்து சாகாமம் குடிநிலம் நோக்கி பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள், பலத்த காற்று காரணமாக வேக கட்டுப்பாட்டை இழந்து வயல் வெளியில் தூக்கி வீசப்பட்ட நிலையில், அதில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் சாகாமம் குடிநிலம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதுடைய தர்மராசா நிதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply