பிக்பாஸ் சீசன்7 அக்டோபர் 1ம் தேதி ஆரம்பிக்க உள்ளது. இது முன்பிருந்த சீசன் போல் அல்லாமல் இதில் போட்டியாளர்கள் இரண்டு வீடுகளில் தங்கவைக்கப்படுவார்கள் என்று கமலஹாசன் ப்ரோமோவில் தெரிவித்து இருந்தார்.
என்ன ஜீ ஆபீஸ் வந்ததிலிருந்து ஒரே குஷியா வேலை செய்றீங்க, என்ன மேட்டர்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோம்ல…
பிக்பாஸ் சீசன் 7 அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்போகுதுல்ல ப்ரோ…
Bigg Boss Tamil Season 7 Grand Launch – அக்டோபர் 1 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. @ikamalhaasan @disneyplusHSTam #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/di3UPo4T8c
— Vijay Television (@vijaytelevision) September 15, 2023
என்ன? பிக்பாஸ் 7ஆ… இப்பதான் பிக்பாஸ் சீசன்6 முடிஞ்ச மாதிரி இருக்கு, அந்த ஃபீவரே இன்னும் அடங்கல… அதுக்குள்ள பிக்பாஸ் 7 ஆ….
அட, ஆமா ப்ரோ… இத நம்ம உலக நாயகனே ப்ரமோ வெளியிட்டு இருக்காரு. அதுல… “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” நு பஞ்ச் டயலாக் சொல்லி நம்மள வேற லெவலுக்கு எதிர்பார்க்க வச்சு இருக்காரு.. அதுல அவரோட ஓப்பனிங்க பார்க்கணுமே… வேற லெவல், கெட்டப்புல தெரிக்கவிட்டுருக்காரு”
“சூப்பரு… அப்புறம்? இந்த தடவையும் புத்தக விமர்சனம் இருக்குமா ஜீ?’
”இருக்கும்னு தான் நெனைக்கிறேன். புத்தகம் மட்டும் இல்ல, ரெண்டு அவதாரமால்ல வராரு”
“ரெண்டு அவதாரமா? என்ன சொல்றீங்க ஜீ…
“ஆமா ப்ரோ…. ரெண்டு கமலஹாசன் வராரு… ஒருத்தரு கிராமத்து அவதாரமா, இன்னொருத்தர் மார்டனால இருக்காரு.”
“அப்படீனா… ரெண்டு வீடா?”
“கரெக்ட்… ரெண்டு வீடாம். ஒரு வீட்டையே ரெண்டாக்கிடுவாங்க… இப்போ ரெண்டு வீடு வேற… என்னென்ன பிரச்சனைகள் நடக்கப்போகுதோ தெரியலையே ப்ரோ…?”
“பிரச்சனை நடந்தாதானே ஜீ…. பாக்குற நமக்கு இண்டிரஸ்டிங்கா இருக்கும். ஆனா… போன பிக்பாஸ் 6 ல ஜி.பி.முத்து கலக்குவாருன்னு நாம ரொம்ப எதிர்பார்த்தோம், ஆனா சில வாரத்துல அவரே கலங்கிட்டு வெளில போயிட்டாரு.”
“அசீம், விக்ரமன், கலக்கலையா?… விக்ரமனுக்கு எத்தன ரசிகர்கள் இருந்தாங்கன்னு தெரியுமில்ல… “
“தெரியும், தெரியும் ஜீ…, அதுல நீயும் ஒண்ணுன்னு எனக்கு நல்லாவே தெரியும். விக்ரமனின் ‘அறம் வெல்லும்’ வார்த்தைய ட்ரெண்டாகினது நீதான்னு எனக்கு தெரியும்”
“தெரிஞ்சிருச்சா…. எல்லாமே தெரிஞ்சிருச்சா…”
“அதுமட்டுமா… விக்ரமன்தான் வெற்றி பெறுவாருன்னு நெனச்ச சமயத்துல, அசீம் பிக்பாஸ் டைட்டிலை தட்டிட்டுப் போய் நீ ஏமாந்ததும் தெரியும்.”
“இதுதான் துரோகிய கூடவே வச்சுருக்கக்கூடாதுன்றது . பாரு நான் மறந்ததெல்லாத்தையும் நீ ஞாபகம் வச்சுருக்க…”
“சரி…ஜீ… அதவிடு… பிக்பாஸ் சீசன்7 பத்தி சொல்லு… அதுல யார் யார் கலந்துக்கபோறாங்கன்னு தெரியுமா?
“நா கேள்விப்பட்டதை சொல்றேன் மனசோட வச்சுக்குங்க ப்ரோ… பப்லு, சந்தோஷ் பிரதாப், அப்புறம் இப்போ பஸ் ஓட்டி ஒரு பொண்ணு ட்ரெண்ட் ஆனதே… “
“சர்மிளாவா…?”
“ஆமா அவங்கன்னு தான்… இவங்கள தவிர நடிகைல, அம்மு அபிராமி, ரேகா நாயர், சோனியா அகர்வால், அப்புறம் தர்ஷா குப்தா, வி.ஜே.ரக்ஷன், நடன இயக்குநர் ஜாக்குலின், ஸ்ரீதர், மாடலிங் நிலா, தினேஷ், நியூஸ் ரீடர் ரஞ்சித், வீஜே.பார்வதி, காக்கா முட்டையில் நடிச்சாருல்ல விக்னேஷ் அவரு.. அப்புறம் நடிகர் அப்பாஸ், கல்லோரி அகில், உமா ரியாஸ், மா.க.ப ஆனந்த், ரோஷ்னி ஹரிபிரியன் , கே.பி.ஒய்.சரத்.”
“போதும் ஜீ லிஸ்ட் பெருசால்ல இருக்கு, சரி, சரி… கமலோட ப்ரோமொ வை போடு… என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.
Voir cette publication sur Instagram