இந்தப் புகைப்படத்தில் வீற்றிருக்கும் தங்க நிற மாளிகையையும், அதற்கு முன்பு அழகாகக் காட்சி தரும் பசுமையான செடிகளையும் பார்த்தவுடன் ஏதோவொரு ராஜா
வுடைய அரண்மனை என்றுதான் நினைப்போம்.
ஆனால், இது ஒரு பொதுக் கழிப்பறை. உலகிலேயே சொகுசான பொதுக் கழிப்பறை இது.
அரண்மனை போலத் தோற்றமளிக்கும் இந்தக் கழிப்பறைதான் இப்போது இணையத்தில் செம வைரல்.
தாய்லாந்தில் அமைந்துள்ள இந்தக் கழிப்பறையைக் குறித்து கிருஷ்ணாங் என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே டிரெண்டாகிவிட்டது இந்தக் கழிப்பறை அரண்மனை.
வெளியில் உள்ள பிரமாண்டத்தைப் போலவே உள்ளேயும் சொகுசாக டிசைன் செய்யப்பட்டிருப்பது இதன் ஹைலைட். தாய்லாந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக இதை வடிவமைத்திருக்கின்றனர்.
தினமும் இந்தக் கழிப்பறையை பார்வையிடுவதற்காக மட்டுமே ஆயிரக்கணக்கானோர் வருகை புரிகின்றனர்.
இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மற்ற இடங்களிலும் அரண்மனை கழிப்பறை உருவாகும் என்கிறது தாய்லாந்தின் சுற்றுலா வளர்ச்சிக் குழு.