கண்டி மாவத்தேகம பகுதியில் புதல்வியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவரை கைது செய்வதற்கு காவல் துறையினர் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.
கண்டி மாவத்தேகம பகுதியில் 09 வயது தனது புதல்வியை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் புதல்வியின் தாய் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் புதல்வியின் தந்தை அப்பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
942913940v என்ற தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்குரிய 29 வயதுடைய கிஹான் தனுஷ்க்க என்பவரே சந்தேக நபராவார்.
இவர் தொடர்பில் தகவல் அறிந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
No description available.
No description available.


<!–

Share.
Leave A Reply