ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படை தளத்தின் மீது உக்ரைன் நீண்டதூர ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

உக்ரைனின் இந்த தாக்குதலால் படைவீரர் ஒருவர் காணாமல்போயுள்ளார் என ரஸ்யா தெரிவித்துள்ளது.

செவஸ்டபோலில் உள்ள கட்டிடங்களிற்கு மேலாக பாரிய புகைமண்டலம் எழுவதை காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இந்த தளத்தில் ரஸ்யாவின் மிகச்சிறந்த  கடற்படையினர் உள்ளதால் உக்ரைனிற்கு இது ஒரு முக்கிய இலக்காக காணப்படுகின்றது.

சமீபத்தில் உக்ரைன் ரஸ்யாவின் வான்பாதுகாப்பு பொறிமுறை உட்பட கிரிமியாவில் உள்ள பல இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

பிரிட்டனும் பிரான்சும் வழங்கிய ஸ்டோர்ம் சடோ ஏவுகணைகளை பயன்படுத்தியே இந்த தாக்குதல் இடம்பெற்றது என உக்ரைன் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்ஃ

ரஸ்யாவின் தளத்தை வெற்றிகரமாக தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இன்னும் பல தாக்குதல்கள் உள்ளன என நாங்கள் உங்களிற்கு தெரிவித்திருந்தோம் என உக்ரைனின் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply