குருணாகல் தம்புள்ளை பிரதான வீதியின் கலேவெல பெலிகமுவ பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) காலை தனியார் பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும், ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியில் சென்றவர்கள் ஆராச்சிக்கட்டுவ பகுதியைச் சேர்ந்த குழுவினர் என ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.