கன­டாவில் சீக்­கிய அமைப்பு ஒன்றின் தலை­வ­ரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனே­டிய மாகா­ண­மான பிரிட்டிஷ் கொலம்­பி­யாவில் சுட்டுக் கொல்­லப்­பட்­டதன் பின்­ன­ணியில், இந்­திய அர­சாங்கம் இருப்­ப­தாக, கனே­டிய பிர­தமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்­றம்­சாட்­டி­யதை அடுத்து இந்­தி­யா­வுக்கும் கன­டா­வுக்கும் இடை­யி­லான உறவு மோச­ம­டைந்­துள்­ளது.

இரண்டு நாடு­களும் மூத்த இரா­ஜ­தந்­தி­ரி­களை வெளி­யேற்­றி­யி­ருக்­கின்­றன. தமது குடி­மக்­க­ளுக்கு பயண எச்­ச­ரிக்­கை­க­ளையும் விடுத்­தி­ருக்­கின்­றன.

இந்த நிலை­மைக்கு முக்­கி­ய­மான காரணம், இந்­தியப் புல­னாய்வுப் பிரிவின் செயற்­பாடு அல்­லது அதன் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டு தான்.

2014இல், இலங்கை அர­சாங்­கத்­துக்கு எதி­ராக இந்­தியப் புல­னாய்வுப் பிரி­வான றோ அதி­காரி இளங்கோ செயற்­ப­டு­கிறார் என்று, அப்­போது பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்த கோட்­டா­பய ராஜபக் ஷ

இந்­திய அர­சாங்­கத்தின் கவ­னத்­துக்கு கொண்டு சென்­ற­துடன் அவரை கொழும்பில் இருந்து திருப்பி அழைக்­கு­மாறும் வலி­யு­றுத்­தினார்.

அதை­ய­டுத்து றோ அதி­காரி இளங்கோ கொழும்பில் இருந்து திருப்பி அழைக்­கப்­பட்டார்.

இதனால் இந்­திய- இலங்கை உற­வுகள் சீர்­கு­லையத் தொடங்­கின.

இதன் பின்னர், 2015 இல் மஹிந்த ராஜபக்ஷ தோற்­க­டிக்­கப்­பட்ட போது, றோ தான் அதனைத் திட்­ட­மிட்டு நடத்­தி­யது என்று ராஜபக் ஷவினர்  குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தனர்.

1980களின் நடுப்­ப­கு­தியில் விடு­தலைப் புலிகள் உள்­ளிட்ட தமிழ் அ­மைப்­புக்­க­ளுக்கு இந்­தியப் புல­னாய்வு அமைப்­பான றோ, பயிற்­சி­க­ளையும், ஆயு­தங்­க­ளையும் வழங்­கி­யது.

இது அப்­போ­தைய ஜே.ஆர்.ஜய­வர்­தன அர­சாங்­கத்­துக்கு கோபத்தை ஏற்­ப­டுத்­தி­யது. அது இந்­திய அர­சாங்­கத்­துக்கு விரோ­த­மான செயற்­பாட்டை அவர் முன்­னெ­டுக்­கவும் கார­ண­மாக அமைந்­தது.

கடந்த காலங்­களில் இந்­தியா, பாகிஸ்தான், அமெ­ரிக்கா, இஸ்ரேல் போன்ற பல நாடு­களின் புல­னாய்வு அமைப்­பு­களின் செயற்­பா­டுகள், நாடு­க­ளுக்­கி­டை­யி­லான உற­வு­களை சீர்­கு­லைத்­தி­ருக்­கின்­றன. உள்­நாட்­டிலும் குழப்­பங்­களை உரு­வாக்­கி­யி­ருக்­கி­ன்றன.

இலங்­கை­யிலும் புல­னாய்வு அமைப்­பு­களின் செயற்­பா­டுகள் தற்­போது கடு­மை­யான சந்­தே­கங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

சனல் 4 ஆவ­ணப்­படம் வெளி­யான பின்னர், இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவில் பணி­யாற்­றிய- தற்­போது அரச புல­னாய்வுச் சேவையின் தலை­வ­ராக இருக்­கின்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தல்­களின் முக்­கி­ய­மான சூத்­தி­ர­தாரி அவரா என சந்­தே­கங்­களை எழுப்­பி­யி­ருக்­கி­றது.

அவர் அதனை நிரா­க­ரித்­தி­ருக்­கின்ற போதும், அவ­ருக்கு எதி­ராக கூறப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுகள் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று பர­வ­லாக வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது.

அத்­துடன் சனல் 4 குற்­றச்­சாட்­டு­களை பாது­காப்பு அமைச்சு மறுத்­தி­ருந்­தாலும், ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க, நீதி­ய­ரசர் இமாம் தலை­மை­யி­லான விசா­ரணைக் குழு­வொன்றை நிய­மித்­தி­ருக்­கிறார். பாரா­ளு­மன்றத் தெரிவுக் குழு­வொன்றும் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளது.

ஆனாலும், மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே இன்­னமும் அரச புல­னாய்வுச் சேவையின் தலை­வ­ராக பணியைத் தொடர்ந்து கொண்­டி­ருக்­கிறார்.

இத்­த­கைய நிலையில் தான், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பா­கவும், புல­னாய்வுப் பிரி­வு­களின் செயற்­பா­டுகள் தொடர்­பா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ராக முன்னர் பணி­யாற்­றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன தொலைக்­காட்சி ஒன்­றுக்கு விரி­வான செவ்­வியை வழங்­கி­யி­ருக்­கிறார்.

2012 தொடக்கம் 2019 வரை – நீண்ட காலம் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ராகப் பதவி வகித்த அவ­ரிடம், சுமார் இரண்டு மணி­நேரம் இந்த நேர்­காணல் நடத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இதில் அவர் ஐந்து முக்­கிய விட­யங்­களை குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

1. மிகவும் அதி புத்­தி­சா­லி­யான ஒரு­வரே, சஹ்­ரானை கட்­டுப்­ப­டுத்தி, ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தல்­களை ஒருங்­கி­ணைத்­தி­ருக்­கிறார்.

2. சஹ்ரான் மற்றும் அவ­ரது உத­வி­யா­ளர்­க­ளுடன் அரச மற்றும் இரா­ணுவப் புல­னாய்வுப் பிரி­வுகள், ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­த­லுக்கு முன்­னரும், தாக்­கு­தலின் போதும், தாக்­கு­த­லுக்குப் பின்­னரும் தொடர்­பு­களை வைத்­தி­ருந்­தன.

3. வவு­ண­தீவில் சஹ்ரான் குழு­வி­னரால் இரண்டு பொலிஸார் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்தை, விடு­தலைப் புலி­களின் செய­லாக திசை திருப்பும் செயற்­பாட்டில் இரா­ணுவ மற்றும் அரச புல­னாய்வுப் பிரி­வுகள் ஈடு­பட்­டன.

4. சஹ்ரான் குழு­வி­ன­ருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வெளியக ஆத­ரவு கிடைத்­தி­ருக்­க­வில்லை.

5. சுரேஷ் சலே­வுக்கு எதி­ரான சனல் 4 குற்­றச்­சாட்டு விசா­ரிக்­கப்­பட வேண்டும்.

ஆகிய ஐந்து விட­யங்­க­ளையும் ரவி செனவி­ரத்ன வலி­யு­று­த்தி­யி­ருக்­கிறார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்­குதல் நடப்­ப­தற்கு முன்­னரும், நடந்த பின்­னரும், தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்­களைக் கண்­டு­பி­டிப்­பது, மற்றும் அவர்­களின் ஊடாக உண்மை வெளிப்­ப­டு­வதை தடுப்­ப­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருப்­பது வெளிப்­ப­டை­யா­கி­யி­ருக்­கி­றது.

குற்­ற­வா­ளி­களை காப்­பாற்­று­வ­தற்கு அல்­லது அவர்கள் பற்­றிய உண்­மையை மறைப்­ப­தற்கு அரச புல­னாய்வுப் பிரி­வு­களே முற்­பட்­டி­ருக்­கின்­றன என்ற குற்­றச்­சாட்டு இப்­போது பல்­வேறு தரப்­பு­களில் இருந்து வரு­கி­றது.

முன்னாள் சட்ட மா அதிபர் தப்­புல டி லிவேரா இந்த சந்­தே­கத்தை முதலில் வெளி­யிட்டார். பேராயர் மல்கம் ரஞ்­சித்தும் வெளி­யிட்டார். சனல் 4 ஆவ­ணப்­ப­டமும் அதனை வெளி­யிட்­டது. இப்­போது முன்னாள் சி.ஐ.டி. பணிப்­பாளர் ரவி செனவி­ரத்­னவும் அதே சந்­தே­கத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

இதி­லி­ருந்து, அரச புல­னாய்வுப் பிரி­வுகள் அர­சாங்­கத்தின் உத்­தி­யோ­க­பூர்வ அமைப்­பாக செயற்­ப­டு­கின்­ற­னவா அல்­லது, தனி­ந­பர்கள், அல்­லது அமைப்­புகள், தரப்­பு­களின் நலன்­க­ளுக்­காக செயற்­ப­டு­கின்­ற­னவா என்ற கேள்வி எழு­கி­றது.

அதை­விட ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தலை நடத்­து­கின்ற அள­வுக்கு- அதா­வது ஒருங்­கி­ணைந்த தாக்­கு­தல்­களை நடத்­து­கின்ற அள­வுக்கு சஹ்ரான் ஒரு  தகை­மை­வாய்ந்த நபர் அல்ல என்­பது, ரவி செனி­வி­ரத்­னவின் கருத்­தாக உள்­ளது.

சஹ்­ரா­னிடம் அதற்­கான கல்வி அறிவு இல்லை. அவ­ருக்கு பயிற்­சி­களோ அனு­ப­வமோ இல்லை. என்று கூறும் அவர், இந்த தாக்­கு­தலை நடத்­து­வ­தற்கு சஹ்­ரானை ஒருவர் கட்­டுப்­ப­டுத்தி வழி­ந­டத்­தி­யி­ருக்­கிறார் என்ற முடி­வுக்கும் வந்­தி­ருக்­கிறார்.

ஏனென்றால் விடு­தலைப் புலிகள் கூட இவ்­வா­றான ஒரு ஒருங்­கி­ணைந்த தாக்­கு­தலை  நடத்­து­கின்ற வல்­ல­மையை நிரூ­பித்­தி­ருக்­க­வில்லை என்­பது அவ­ரது கருத்து.

புலிகள் பல ஒருங்­கி­ணைந்த தாக்­கு­தல்­களை வடக்கு, கிழக்கில் நடத்­தி­யி­ருக்­கின்­றனர்.

ஆனால், கொழும்­பிலோ நாட்டின் பிற பகு­தி­க­ளிலோ இவ்­வா­றான ஒருங்­கி­ணைந்த தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தில்லை. பல தாக்­கு­தல்­களை ஒரே நேரத்தில் ஒருங்­கி­ணைத்துச் செயற்­ப­டுத்­து­வது சுல­ப­மான காரியம் இல்லை.

விடு­தலைப் புலிகள் அவ்­வாறு ஒருங்­கி­ணைந்த தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தற்கு பல இடை­யூ­றுகள் இருந்­தன.

தாக்­கு­த­லுக்­கான ஆட்­க­ளையும்  வெடி­பொ­ருட்­க­ளையும் ஒரே நேரத்தில் பெருந்­தொ­கையில் கொண்டு சென்று சேர்ப்­பது கடினம்.

அப்­போது கொழும்பில், பாது­காப்புக் கெடு­பி­டிகள் அதிகம்.

அதனைத் தாண்டி ஒருங்­கி­ணைந்த தாக்­கு­தல்­களை நடத்­து­வது கடினம்.

ஆனால் ஸஹ்ரான் குழு­வினர் ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தலை நடத்­திய கால­கட்டம், வேறு. அமை­தி­யான அந்தச் சூழலில் யாரும் யாரையும் சந்­தே­கிக்கும் சூழலோ, சோத­னை­யிடும் சூழலோ இருக்­க­வில்லை. பாது­காப்புக் கெடு­பி­டி­களும் இருக்­க­வில்லை.

வவு­ண­தீவில் இரண்டு பொலி­ஸாரை சஹ்ரான் குழு­வினர் கொன்று, துப்­பாக்­கி­களை பறித்துச் சென்ற போதும், அதனை புலி­களே செய்­தனர் என்று திசை திருப்பி விடும் விசா­ர­ணை­களே முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

அதா­வது ஸஹ்ரான் குழு­வினர் ஒருங்­கி­ணைந்த தாக்­கு­தலை முன்­னெ­டுக்க, தேவை­யான உள்­ளக ஆத­ரவும் புற ஆத­ரவும் இருந்­தி­ருக்­கி­றது.

இத்­த­கைய நிலையில் தாக்­கு­தல்­களை ஒருங்­கி­ணைப்­பதில் அதிக சிரமம் இருக்­க­வில்லை.

ஆனாலும், அவ்­வாறு ஒருங்­கி­ணைந்த தாக்­கு­தலை நடத்தும் ஆற்­றலை ஸஹ்ரான் கொண்­டி­ருக்­க­வில்லை என்­பதே ரவி சென­வி­ரத்­னவின் கருத்து.

Zahran-Hashim

ஸஹ்­ரானை கட்­டுப்­ப­டுத்தி வழி­ந­டத்தும் ஒரு அதி புத்­தி­சாலி இருந்­தி­ருக்­கிறார். அவர் தாக்­கு­தலை ஒருங்­கி­ணைத்து நடத்­து­வ­தற்­கான பயிற்சி மற்றும் அனு­ப­வத்தைக் கொண்­ட­வ­ராக இருந்­தி­ருக்­கிறார் என்று முக்­கி­ய­மான சந்­தே­கத்தை எழுப்­பி­யி­ருக்­கிறார் ரவி செனி­வி­ரத்ன.சுரேஸ் சலே மீது சிஐ­டியின் முன்னாள் பணிப்­பாளர் நேர­டி­யாக குற்­றச்­சாட்டை முன்­வைக்­கா­வி­டினும், அவரை நோக்­கிய சந்­தேகப் பார்­வையை வலுப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

குற்றப் புல­னாய்வுப் பிரி­வுடன் சுரேஸ் சலே இணங்கிச் செயற்­பட்­ட­வ­ரல்ல என்­பதும் ரவி செனி­வி­ரத்­னவின் கருத்தில் இருந்து புரிந்து கொள்ள முடி­கி­றது.

இந்­த­நி­லையில் தான் அவர், சுரேஸ்  சலே மீதான  சனல் 4 குற்­றச்­சாட்­டுகள் குறித்து விசா­ரிக்­கப்­பட வேண்டும் என்று கூறி­யி­ருக்­கிறார்.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற போது, அரசின் புலனாய்வுப் பிரிவுகள் செயலிழந்து விட்டதாகவும், நல்லாட்சி அரசாங்கம், பாதுகாப்புக் கட்டமைப்புகளை சீர்குலைத்து விட்டதாகவும் ராஜபக்  ஷவினர் குற்றம்சாட்டினர்.

கோட்டாபய ராஜபக்  ஷ ஆட்சிக்கு வந்தவுடன், பாதுகாப்பு மற்றும் புலனாய்வுக் கட்டமைப்புகளை மாற்றியமைத்தார்.

ஆறு மாதங்களுக்குள் வலுவான புலனாய்வுக் கட்டமைப்பை ஏற்படுத்தி விட்டதாகவும், இனி யாராலும் அதனை அசைக்க முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

அவ்வாறான புலனாய்வுக் கட்டமைப்பின் மீது தான் இப்போது குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

கோட்டாபய ராஜபக்  ஷவினால் வலுப்படுத்தப்பட்ட புலனாய்வு கட்டமைப்பு நாட்டுக்காக பணியாற்றும் வகையில் வலுப்படுத்தப்பட்டதா அல்லது தனிநபர்கள் அல்லது சில தரப்பினரை பாதுகாப்பதற்காக பலப்படுத்தப்பட்டதா என்ற கேள்விகள் இப்போது தோன்றியுள்ளன.

இந்தச் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளாது போனால் புலனாய்வுப் பிரிவுகள், இந்திய – கனேடிய நட்புறவில் ஏற்பட்டிருக்கின்ற விரிசலைப் போல, அரசாங்கத்தை நெருக்கடிக்குள் கூட தள்ளி விடும்.

சுபத்ரா virakesari

Share.
Leave A Reply