தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பகால மற்றும் முக்கிய உறுப்பினராகவும் இருந்த திலீபன் என்றழைக்கப்படும் பார்த்திபன் இராசையா இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அறப் போராட்டத்தின் வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சமயத்திலும், உறுதியுடன் அந்த உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்.

1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் மரணம் எய்தினார்.

அவரது நினைந்தல் வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலையில், ஒருவர், தியாக தீபம் திலீபனின் உருவப்படத்தை தனது கையில் பச்சைக்குத்தியுள்ளார்.

Share.
Leave A Reply