யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஜெயக்குமார் டானுகா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த யுவதியின் தாயார் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் தந்தை இரண்டாவது திருமணம் செய்த நிலையில் சித்தியுடனே யுவதி வசித்து வந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் கடந்த ஜுலை மாதம் அவரது மாமாவும் உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி அவரது 90வது நாள் சடங்கிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து மனவிரக்தியுடன் இருந்துள்ளார்.

இவ்வாறான ஒரு நிலையில் அவர் இன்றையதினம் (25-09-2023) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply