யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர் பாடசாலையிலிருந்து தனது பிள்ளைகளை அழைத்து வரச் சென்ற வேளையில், அவ்வீட்டினுள் நுழைந்த திருடர்கள் 13 பவுண் நகை மற்றும் ஒருதொகை வெளிநாட்டு நாணயங்களை திருடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (26) மதியம் இடம்பெற்றுள்ளது.
இந்த திருட்டு தொடர்பில் வீட்டு உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.