யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக இருந்த மரமொன்று நேற்று திடீரெனச் சரிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது” யாழ் பொது நூலகத்திற்கு முன்பாகவுள்ள யாழ் மாநகர சபையின் சிறுவர் பூங்காவில் பாரிய மரங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் நேற்று குறித்த பகுதியில் உள்ள மரமொன்றின் கீழ் நிழலுக்காகச் சாரதி ஒருவர் தனது முச்சக்கர வண்டியை நிறுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக அடித்த பலமான காற்றினால் பாரிய மரமொன்று முறிந்து குறித்த முச்சக்கர வண்டி மீது விழுந்துள்ளது.

இதில் முச்சக்கர வண்டி முழுமையாகச் சேதமடைந்துள்ளதோடு சாரதியும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

Share.
Leave A Reply