சென்னை: Radhika Preethi (ராதிகா ப்ரீத்தி) எவ்வளவு நாள்தான் அட்ஜெஸ்ட் செய்து நடிப்பது என்று பூவே உனக்காக சீரியலில் நடித்த ராதிகா ப்ரீத்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நடிகைகளை காலங்காலமாக படுத்திக்கொண்டிருக்கிறது.

அவர்களின் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களிடம் வேறு ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்று பலரும் கூறிவருகின்றனர்.

ஆனால் இப்போதைய காலம்வரை அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை பெண்களுக்கு தீர்ந்தபாடில்லை.

மனம் திறக்கும் நடிகைகள்: அட்ஜெட்ஸ்ட்மெண்ட்டால் தாங்கள் சந்திக்கும் கொடுமை குறித்து நடிகைகள் வெளியில் பேசுவது அரிதிலும் அரிதுதான்.

ஆனால் சமீபகாலமாக தைரியமாக அனைத்தையும் பேசிவருகின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவிடம்கூட அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கான அப்ரோச் போயிருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார்.

வரலட்சுமியிடமும்: அதேபோல் சினிமாவில் வாரிசு நடிகையாக அறியப்படும் வரலட்சுமியிடம்கூட அட்ஜெஸ்ட்மெண்ட் அப்ரோச் நடந்திருக்கிறது.

தந்தை சினிமாவில் இருந்தும்கூட வரலட்சுமியிடம் இப்படி அப்ரோச் போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகைகளுக்கு இப்படி ஒரு பக்கம் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை நடக்க மறுபக்கம் அவர்களை அலட்சியமாக நடத்தும் முறையும் அதிகரித்திருக்கிறது.

என்ன நடக்கும்?: வளர்ந்த நடிகைகள் என்றால் அவர்களிடம் ஒருமாதிரியும் வளர்ந்துவரும் நடிகைகள் என்றால் அவர்களிடம் ஒருமாதிரியும் நடந்துகொள்ளும் வழக்கம் சினிமாவில் இருக்கிறது.

அதே வழக்கம் தற்போது சின்னத்திரையிலும் இருப்பது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து பூவே உனக்காக சீரியலிலிருந்து விலகிய நடிகை ராதிகா ப்ரீத்தி ஒரு பேட்டி அளித்திருக்கிறார்.

என்ன நடந்தது?: அவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசுகையில், “சீரியலில் நடித்தபோது ஒரு பேச்சிலர் ரூமுக்கு என்னை அனுப்பி அங்கு ரெடியாகுங்கள் என்று சொன்னார்கள்.

யாரும் இருக்கமாட்டார்கள் என்று நினைத்து போனேன். ஆனால் அங்கு ஒருவர் சட்டை போடாமல் டவுசருடன் படுத்திருந்தார்.

சரி நான் உள்ளே போனதும் அவர் வெளியே போய்விடுவார் என்று நினைத்தேன். அந்த நபரோ வெளியே போகவே இல்லை.

அங்கு எப்படி என்னால் ரெடி ஆக முடியும்.

 எவ்வளவுதான் அட்ஜெஸ்ட் பண்றது: உடனடியாக நான் வெளியே வந்து சீரியல்காரர்களிடம் நான் எப்படி இங்கு ரெடியாவது என்று கேட்டேன்.

அதற்கு அவர்களோ பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகளே இதெல்லாம் கண்டுக்காம ரெடி ஆவாங்க. நீ என்ன பெரிய ஆர்ட்டிஸ்ட்டா இப்போதானே வந்திருக்க.

இதெல்லாம் அட்ஜெஸ்ட் பண்ணிதான் போகனும் என சொன்னார்கள். எவ்வளவுதான் அட்ஜெஸ்ட் பண்ணி நடிப்பது” என்று கொந்தளிப்புடன் பேசி முடித்தார் ப்ரீத்தி.

 

Share.
Leave A Reply