இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாதத்தின் போது இம்ரான் கான் யூதர்களின் ஏஜென்ட் என விமரிசித்ததால் ஆத்திரம் அடைந்து கைகலப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள பிரபல தொலைக்காட்சி நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில், இம்ரான் கான் வழக்கறிஞர் ஷெர் அப்சல் கான் மார்வாட், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சி சார்பில் அதன் செனட்டர் அப்னான் உல்லா கான் உட்பட சில முக்கியக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது, இம்ரான் கான் கட்சியின் வழக்கறிஞர் ஷெர் அப்சல் கான் மார்வாட்டுக்கும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின் செனட்டர் அப்னான் உல்லா கானுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இம்ரான் கான் வக்கீல் மார்வாட், அப்னானை தாக்க, பதிலுக்கு அப்னானும் தாக்க, நிகழ்ச்சி நடந்த இடம் போர்க்களமானது.
இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விரைந்து வந்து இருவரையும் சமாதானப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பான காணொளிக் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.