நாம் எல்லாம் ரூ.100, 200 கொடுத்தோ அல்லது அதிகபட்சமாக ரூ.500, 1,000 கொடுத்தோ லட்டு வாங்கி சாப்பிடுவோம்.
ஆனால் இங்கு ஒரு ஒரு லட்டு ரூ.1.25 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாம். ஹைதராபாத்தில் உள்ள பந்தலகுடா விநாயகர் லட்டு பிரசாதம், செப்டம்பர் 28, வியாழன் அன்று வரலாற்றில் இடம்பிடித்தது,
இதுவரை ஏலத்தில் விடப்பட்ட மிக விலையுயர்ந்த லட்டுவாக ரூ. 1.25 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது!
ரிச்மண்ட் வில்லாஸில் லட்டு தயாரித்து ஏலம்
ஹைதராபாத் ரிச்மண்ட் வில்லாஸில் வசிப்பவர்கள் தங்கள் பண்டிகைகளின் ஒரு பகுதியாக விநாயகர் லட்டுவை ஆண்டுதோறும் உருவாக்கி ஏலத்தில் விற்பதை மனதைக் கவரும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர்.
இந்த ஏலத்தில் இருந்து பெறப்படும் நிதியானது ஒரு உன்னதமான நோக்கத்திற்குச் சேவை செய்கிறது.
அதாவது அந்தப் பணம் யாவும் பள்ளிகளுக்கான ஆதரவு, சுகாதார சேவைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தொண்டு முயற்சிகளுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்த ஆண்டு ரிச்மண்ட் வில்லாஸில் தயாரிக்கப்பட்ட விநாயகர் லட்டு அனைவரையும் திகைக்க வைக்கும் வகையில் ரூ.1.25 கோடிக்கு ஏலம் போனது
ஹைதராபாத்தின் பாலாபூரில் துவங்கிய விநாயகர் லட்டு ஏலம்
முதன்முதலாக 1994 ஆம் ஆண்டு ஹைதராபாத்தின் பாலாபூர் என்ற இடத்தில் விநாயக பெருமானுக்காக லட்டு தயாரித்து ஏலம் விட்டனர்.
அதை கோலன் மோகன் ரெட்டி என்ற விவசாயி ரூ.450 ஏலத்தில் வாங்கினார். கடந்த ஆண்டு, பாலாபூர் லட்டு ரூ.24.6 லட்சத்துக்கும், இந்த ஆண்டு ரூ.27 லட்சத்துக்கும் விற்கப்பட்டது.
முதன்முதலில் கணபதிக்காக லட்டு தயாரித்து ஏலம் இடம் விடப்பட்ட இடம் பாலாபூர் தான். அதைத் தொடர்ந்து பந்தலகுடாவிலும் லட்டு தயாரிக்கும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது.
ரூ.24.6 லட்சத்துக்கு விற்கப்பட்ட பாலாபூர் லட்டு
21 கிலோ எடையுள்ள புகழ்பெற்ற பாலாபூர் லட்டு இந்த ஆண்டு துர்காயம்ஜால் பகுதியைச் சேர்ந்த தாசரி தயானந்த் ரெட்டி என்பவரால் கைப்பற்றப்பட்டது.
விஎல்ஆர் பில்டர்ஸின் வெங்கேட்டி லக்ஷ்மா ரெட்டி ரூ.24.6 லட்சத்துக்கு வாங்கியதன் மூலம் கடந்த ஆண்டு விலையை விட இந்த ஆண்டு ஏல விலை ரூ.3 லட்சம் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.
பல்வேறு இடங்களில் விற்கப்படும் விநாயகர் லட்டு
இதற்கு இணையான நிகழ்வாக, கொய்யால குடத்தில் சீதாராமஞ்சநேய விநாயகர் உத்சவ் கமிட்டியின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஏலத்தில் மற்றொரு கணேஷ் லட்டு 1,02,116 ரூபாய்க்கு ஏலத்திற்கு சென்றது.
கூடுதலாக, யாதாத்ரியில் ஒரு பக்தர் 25,116 ரூபாய்க்கு கணேஷ் சால்வை வாங்கியதாக கூறப்படுகிறது.
பாலாபூர் லட்டுவை முந்திய பந்தலகுடா லட்டு
ரிச்மண்ட் வில்லாஸில் வசிப்பவர்கள் தங்கள் பண்டிகைகளின் ஒரு பகுதியாக கணேஷ் லட்டுவை ஆண்டுதோறும் ஏலத்தில் நடத்துவதை மனதைக் கவரும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர்.
2022ல், பந்தலகுடா லட்டு ரூ.65 லட்சத்தை ஈட்டியது. இதன் மூலம் ரூ.24.6 லட்சத்துக்கு ஏலம் போன பாலாபூர் லட்டுவை இது முந்தியது.
உன்னத பணிகளுக்காக செலவு செயய்ப்படும் ஏல பணம்
நாங்கள் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மளிகைப் பொருட்களையும் பங்களிக்கிறோம்.
எந்தவொரு தன்னார்வ தொண்டு நிறுவனமும் எங்களை அணுகலாம், நாங்கள் அவர்களுக்கு உதவ முயற்சிப்போம் என்ன்று ரிச்மண்ட் வில்லாஸில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் கூறினார்.
பந்தலகுடா ஜாகிரில் உள்ள கணேஷ் லட்டு, ஏலத்தில் 1.25 கோடி ரூபாய்க்கு பெரும் தொகையை பெற்று அனைவரையும் திகைக்க வைத்தது என்பதை நினைத்து அப்பகுதி மக்கள் சந்தோஷத்தில் திளைத்துள்ளனர்.