டெல்லி: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுக்கு வரும் போது கோகைன் போதைப் பொருட்களுடன் வந்ததாக முன்னாள் தூதரக அதிகாரி தீபக் வோரா திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும் டெல்லியில் கோகைன் போதையில் மூழ்கி 2 நாட்களாக அறையைவிட்டே ஜஸ்டின் ட்ரூடோ வெளியே வரவில்லை எனவு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் தீபக் வோரா.

அண்மையில் டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் பங்கேற்றார்.

ஜி 20 உச்சி மாநாடு முடிந்த பின்னர் 2 நாட்கள் கழித்துதான் ட்ரூடோ கனடாவுக்கு சென்றார். அப்போது, ஜஸ்டின் ட்ரூடோ செல்ல இருந்த விமானம் தொழில்நுட்ப கோளாறால் புறப்பட இயலவில்லை என்பது உள்ளிட்ட காரணங்கள் தெரிவிக்கப்பட்டன.

கனடா திரும்பிய உடன் ஜஸ்டின் ட்ரூடோ, சீக்கிய பயங்கரவாதி நிஜ்ஜார் படுகொலைக்கு இந்தியா காரணம் என பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய தூதரக் அதிகாரியை கனடாவில் இருந்து வெளியேற்றினார்.

இதற்கு இந்தியா பதிலடியாக டெல்லியில் இருந்து கனேடிய தூதரை வெளியேற்றியது. இதனால் இந்தியா- கனடா உறவில் விரிசல் விழுந்தது.

கனடாவில் இருந்து இந்துக்களை வெளியேற வேண்டும் என சீக்கியர் அமைப்பினர் அச்சுறுத்தல் விடுத்தனர்.

அதேநேரத்தில் சீக்கிய பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசும் முடுக்கிவிட்டது.

 

இந்நிலையில் டிவி பேட்டி ஒன்றில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருகை தொடர்பாக முன்னாள் இந்திய தூதரக அதிகாரி தீபக் வோரா பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதில், டெல்லி விமான நிலையத்தில் ஜஸ்டின் ட்ரூடோவை என் மனைவி பார்த்தார். அப்போது அவர் மிகவும் விரக்தியான நிலையில் மன அழுத்தத்தில்தான் இருந்தார்.

இதற்கான காரணம் அப்போது தெரியவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் நம்பத்தகுந்த வதந்திகள் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வரும் போதே புல் கோகைன் போதையில் இருந்தார்;

ஜஸ்டின் ரூடோ வந்த விமானத்தில் கோகைன் போதைப் பொருள் பெருமளவு இருந்தது. இதனை மோப்ப நாய்கள் கண்டறிந்தன.

இதன் பின்னர் 2 நாட்களாக முழுமையாக கோகைன் போதையில்தான் ஜஸ்டின் ட்ரூடோ மிதந்தபடியே பொழுதை கழித்தார்.

ஜி 20 உச்சி மாநாட்டின் அமர்வுகளுக்கு கூட ஜஸ்டின் ட்ரூடோவால் வர முடியவில்லை. அந்த அளவுக்கு கோகைன் போதையில் ரூமிலேயே அடைபட்டுக் கிடந்தார். பின்னர்தான் ஒருவழியாக கனடா திரும்பினார் என எழுதி இருந்தன.

 

 

Share.
Leave A Reply