மட்டக்களப்பில் இருந்து பொலனறுவை நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டு 38 வயது இளைஞர் பரிதாபமான முறையில் பலியான சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (3) மதியம் ஏறாவூரில் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் முச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த குறித்த நபர் மீது ரயில் மோதுண்ட போதே விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் காரணமாக முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் குறித்த நபர் ஸ்தலத்திலேயே பலியானார். இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.