சென்னை: Bigg Boss Tamil 7 (பிக்பாஸ் தமிழ் 7) இந்த வார நாமினேஷனில் பவா செல்லத்துரையைவிட அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார் வனிதா மகள் ஜோவிகா.

பிக்பாஸ் ஏழாவது சீசன் நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் சென்றிருக்கின்றனர்.

யுகேந்திரன், கூல் சுரேஷ் உள்ளிட்ட சிலரை தவிர்த்து பெரும்பாலும் பிரபலம் ஆகாதவர்களே இந்த முறை போட்டியில் இருக்கின்றனர்.

இதனால் இந்த சீசன் எப்படி நகரும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

எடுத்ததுமே அலப்பறைதான்: ஆனால் அவர்களின் கேள்வியை காலி ஆக்கும் விதமாக முதல் நாளிலிருந்தே பிக்பாஸ் 7 சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

அதன்படி இரண்டு வீடுகள் இருக்கும் நிலையில் கேப்டனை கவர தவறிய ஆறு பேர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் முதல் நாளே செம ட்விஸ்ட்டா இருக்கே என புருவத்தை உயர்த்த ஆரம்பித்திருக்கின்றனர்.

இரண்டு நாமினேஷன்கள்: அதேபோல் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதற்கே இந்த சீசனில் ஆரம்பமே இரண்டு நாமினேஷன்கள் என்று பிக்பாஸ் அறிவித்தார்.

அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களையும், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களையும் நாமினேஷன் செய்ய வேண்டும் என்று ட்விஸ்ட் வைக்கப்பட்டது.

டார்கெட் பவா: அதன்படி முதல் ஆளாக கன்ஃபெஷன் ரூமுக்குள் சென்ற கூல் சுரேஷ் பவா செல்லத்துரையை நாமினேட் செய்தார். அதற்கு பவா செல்லத்துரையின் வயதை காரணம் காட்டினார்.

அதேபோல் அடுத்தடுத்து வந்த சிலரும் பவா செல்லத்துரையை டார்கெட் செய்தனர். அவர்கள் அதற்கு கூறிய காரணமும் பவாவின் வயதை மையமாக வைத்துதான்.

டார்கெட்டிலும் ட்விஸ்ட்: ஆரம்பத்தில் பலரும் பவாவை டார்கெட் செய்ததால் இந்த வார நாமினேஷனில் அவர்தான் டாப்பில் இருப்பார் என்று கருதப்பட்டது.

ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக அந்த ரேஸில் ஜோவிகா டாப்புக்கு வந்திருக்கிறார். அவரை மொத்தம் ஏழு பேர் நாமினேஷன் செய்திருக்கின்றனர்.

அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் யுகேந்திரன், பிரதீப், பவா செல்லத்துரை, அனன்யா, ஐஷு உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

என்ன காரணம்: ஜோவிகாவின் தாய் வனிதா விஜயகுமார் ஏற்கனவே பிக்பாஸில் கலந்துகொண்ட அனுபவம் பெற்றவர்.

எனவே தான் செய்த தவறுகளை செய்யக்கூடாது என மகளுக்கு சொல்லி அனுப்பியிருப்பார். அதன் காரணமாக ஜோவிகா டஃப் கண்டெஸ்டெண்ட்டாக வரக்கூடும் என ஹவுஸ் மேட்ஸ் அஞ்சுவதாகவும் அதனால்தான் அவரை ஆரம்பத்திலேயே காலி செய்ய முடிவெடுத்துவிட்டார்களோ என ரசிகர்கள் கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

பிக்பாஸ் 7 இரண்டாம் நாள் வீடியோ ஐ பார்க்க இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 02-10-2023 Vijay Tv Show

Share.
Leave A Reply